உக்ரைனிய மக்களை துரத்தும் ரஷ்ய ட்ரோன்கள்: ஐ.நா விசாரணைக் குழு அறிக்கை
ட்ரோன் தாக்குதல் மூலம் உக்ரைனிய பொதுமக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனிய மக்களை துரத்தும் ரஷ்ய ட்ரோன்கள்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை விசாரித்த ஐ.நாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை குழு அளித்த புதிய அறிக்கையில், ரஷ்ய படைகள் உக்ரைனிய மக்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

17 பக்கங்கள் கொண்ட விசாரணைக் குழுவின் இந்த அறிக்கையில், ரஷ்ய படைகள் போர் நடைபெறும் முன் வரிசையில் உள்ள உக்ரைனிய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும். ட்ரோன்களை பயன்படுத்தி உக்ரைனிய குடிமக்களை அவர்களது வீடுகளில் இருந்து துரத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் மூலம் அடைக்கலம் தேடும் உக்ரைனியர்கள் கண்காணிக்கப்பட்ட அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 226 நபர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் தகவல்கள் மூலம் இந்த அறிக்கையானது வெளியாகியுள்ளது.
ரஷ்யா மறுப்பு
இந்நிலையில் உக்ரைனிய மக்களை வேண்டுமென்றே அவர்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வைப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்யா தீவிரமாக மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |