உக்ரைனுக்கு ரஷ்யா அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து: தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட காமிகேஸ் ட்ரோன்களில் புத்தாண்டு வாழ்த்துகள் என்று பொறிக்கப்பட்டு உள்ளது என கீவ் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.
தொடரும் ரஷ்ய தாக்குதல்
கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலானது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் நீடித்தது.
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் புத்தாண்டு உரை முடிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தலைநகர் கீவ் மற்றும் உக்ரைன் பல பகுதிகளில் விமான தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர வான் தாக்குதல் அரங்கேறியது.
Volodymyr Zelenskyy and his wife Olena Zelenska (Anadolu Agency via Getty Images)
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யா, நாடு முழுவதும் 31 ஏவுகணைகள் மற்றும் 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் உயர்மட்ட கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் புத்தாண்டு வாழ்த்து
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள், உக்ரைனுக்குள் தாக்குதலுக்காக அனுப்பிய காமிகேஸ் ட்ரோன்களில் (Kamikaze drones) புத்தாண்டு வாழ்த்துகளை வரைந்து அனுப்பியுள்ளது.
? This image shows the wreckage of one of the damaged #KamikazeDrones that attacked the capital last night. The drone had an inscription “#HappyNewYear" written on the body.
— KyivPost (@KyivPost) January 1, 2023
The pictures were published by Andriy Nebytov, the head of police in the Kyiv region. pic.twitter.com/4dMCvNYLH8
உக்ரைனிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த ஆளில்லா விமானத்தின் உடலில் “புத்தாண்டு வாழ்த்துகள்” என்று எழுதப்பட்டு இருந்தது, அத்துடன் அதில் பரிசு பெட்டி, வானவேடிக்கை, வெடிகுண்டு போன்ற படங்களும் பொறிக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்தப் படங்களை Kyiv பிராந்திய காவல்துறைத் தலைவர் Andriy Nebytov வெளியிட்டுள்ளார்.