ஜெலென்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பு... உக்ரைனை மொத்தமாக உலுக்கியெடுத்த ரஷ்ய ஏவுகணைகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான முக்கியமான சந்திப்புக்கு ஜெலென்ஸ்கி தயாராகும் நிலையில், கியேவ் மற்றும் உக்ரைனின் பல பகுதிகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் ரஷ்யா உலுக்கியெடுத்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட வேண்டிய
இரவு நேரத் தாக்குதல்களுக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் நடைபெறும் தனது பேச்சுவார்த்தைகள், சண்டை நிறுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு தரப்பினராலும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய பிரதேசம் குறித்து கவனம் செலுத்தும் என்று ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் சிறிய அண்டை நாடான உக்ரைன் மீது விளாடிமிர் புடின் படையெடுத்ததன் மூலம் தொடங்கிய இந்த போர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகவும் கொடிய மோதலாகும்.
கியேவ் மீது ரஷ்யா உக்கிரத் தாக்குதலை முன்னெடுத்ததை அடுத்து, உக்ரைனின் வான் பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கையில் இறங்கியது. ரஷ்ய ட்ரோன் தாக்குதல் தலைநகரத்தையும், வடகிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பகுதிகளையும் குறிவைத்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு, ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், உக்ரைனின் முக்கிய துறைமுகங்கள் அமைந்துள்ள தெற்குப் பகுதியான ஒடேசாவின் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான சண்டைகளுக்கு மத்தியில், பிராந்தியமே முக்கிய இராஜதந்திரத் தடையாக நீடிக்கிறது.

15 ஆண்டு கால ஒப்பந்தம்
இதனிடையே, சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத் தயாரிக்கப்பட்ட 20 அம்ச வரைவு 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஜெலென்ஸ்கி கியேவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாக கூறிய ஜெலென்ஸ்கி, சோவியத் ஒன்றியத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் அர்த்தமற்றவையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், இது ஒரு முக்கிய அம்சமாகும்.

இதனிடையே, தாம் ஒப்புதல் அளிக்கும் வரை அவருக்கு எதுவும் கிடைக்காது என்றே ஜெலென்ஸ்கி தொடர்பில் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில், பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக அமெரிக்கா 15 ஆண்டு கால ஒப்பந்தத்தை வழங்கியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்,
ஆனால் ரஷ்யாவின் மேலதிக ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் விதிகளைக் கொண்ட ஒரு நீண்ட கால ஒப்பந்தத்தை உக்ரைன் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |