சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு...மேற்கத்திய நாடுகளின் தடைகளால் திணறும் ரஷ்ய மக்கள்!
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்ய குடும்பங்கள் 24 சதவிகிதம் வரை பணவீக்கத்தை சந்தித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
உக்ரைனில் ரஷ்ய போர் தாக்குதலை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு எதிரான பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
இந்த பொருளாதார தடைகளால் உலக சந்தைகள் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது மற்றும் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடும் பெருமளவு ஏற்பட்டு வருகிறது.
Sugar Apocalypse in Russia
— Putler Xuilo ?????✌️ (@adelonas) March 17, 2022
People grab sugar in a moment. Life getting a bit bitter ?
MITrade of Russia said today: there are plenty of sugar reserves in Russia - moreover, there is already a reduction in demand. Yes,we see this contradiction ??.
pic.twitter.com/wCZ5JRMj0t
இந்த பொருளாதார சரிவு மற்றும் மந்தநிலையானது சோவியத் யூனியன் பிரிக்கப்பட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டு இருக்கும் மிக பெரிய பொருளாதார மந்தநிலையாகும்.
ரஷ்யாவில் சராசரி மாத வருமானம் ஆன 540 பவுண்ட்கள் என்பது பிரித்தானியாவின் கால்பகுதி மதிப்பாகும். இதனை தொடர்ந்து, ஜனவரியில் 150 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்ட தொலைக்காட்சி பேட்டி(TV) தற்போது 350 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
காபி துகள்களின் விலை 70 சதவிகிதம் வரையும் சர்க்கரையின் விலை 30 சதவிகிதம் வரையும் உயர்ந்துள்ளது.
மேலும் பெண்களின் சுகாதார பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது மற்றும் கர்ப்ப பரிசோதனை உபகரணங்களின் விலை 80 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
இன்சுலின் மற்றும் வலிநீக்கிகள் போன்ற சுமார் 80 சதவிகித மருத்துவ பொருட்களுக்கு ரஷ்யாவில் கடுமையான தட்டுப்பாடுகள் நிலவிவருகிறது.
பொருளாதார வல்லுனர்களின் கணிப்பு படி இந்த ஆண்டு ரஷ்யா 24 சதவிகிதம் வரை பொருளாதாரத்தில் சரிவை சந்திக்கலாம் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி லிசா(20) பேசுகையில், கடைகளில் சர்க்கரைகள் இல்லை , அப்படியே அவை கடைகளுக்கு வந்தாலும் அவற்றுக்காக வயதான பாட்டிகள் அடித்து கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Yale பல்கலைக்கழத்தின் அறிக்கைகள் படி 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி விட்டதாக தெரியவந்துள்ளது.
எண்ணெய் நிலையங்களை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: புகையால் சூழப்பட்ட கருங்கடல் நகரம்!