பிரசவ வலியால் பெண்கள் துடித்துக்கொண்டிருந்தபோது மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்
போரின்போது மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது விதி!
ஆனால், அதையெல்லாம் சிந்திக்கும் மன நிலையில் புடின் இல்லை...
அவர், அவரது குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைத்துவிட்டார். மற்றக் குடும்பங்களில் பெண்கள் இருந்தால் என்ன, பிள்ளைகள் இருந்தால் அவருக்கென்ன?
உக்ரைனிலுள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதைப் பார்க்கும்போது இப்படியெல்லாம்தான் எண்ணத் தோன்றுகிறது.
Mariupol என்ற இடத்திலுள்ள மகப்பேறு மருத்துவமனையை ராக்கெட் மூலம் தாக்கியிருக்கிறார்கள் ரஷ்ய வீரர்கள். அவர்கள் தாய்கள் அவர்களைப் பெற்றபோது துடித்ததுபோலவே பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருந்த பெண்கள் உட்பட, சுமார் 17 பேர் அந்த தாக்குதலில் காயமடைந்திருக்கிறார்கள்.
பெண்கள் மறைவாக, பாதுகாப்பான ஓரிடத்தில் பிரசவிக்கவே விரும்புவார்கள். ஆனால், வயிற்றில் பிள்ளையுடன் இருக்கும்போதே, அடிவயிற்றில் காயம் பட்டு மற்றவர்கள் முன்னால் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காணும்போது மனது வலிக்கிறது.
அந்தப் பெண் பிரசவ வலியைத் தாங்குவாளா அல்லது குண்டடிபட்ட காயத்தின் வலியைத் தாங்குவாளா?
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், மீண்டும் தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு காயம்பட்ட உடலுடன் பாதுகாப்பான இடங்களுக்கு தாங்களே நடந்து செல்வதைக் காட்டும் புகைப்படங்கள் சிலவும் வெளியாகியுள்ளன.
அந்தப் பெண்ணின் முகத்தில் முகத்தில் தெரியும் வேதனை, கண்களின் கண்ணீரை அல்ல, இரத்தத்தை வருவிப்பது போல் உள்ளது. பிரசவம் பெண்களுக்கு மறு பிறப்பு என்பார்கள், அப்படி பிரசவிக்க வந்த இடத்தில், கர்ப்பிணிகள் என்று கூட பார்க்காமல் தாக்குகிறார்களே, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்பது போல் இருக்கிறது அவர் பார்வை!
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காரணம், கட்டிட இடிபாடுகளுக்குள் பிள்ளைகள் உட்பட பலர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், இரவில் குளிர் -4 டிகிரிக்கும் கீழே செல்வதால், குளிரில் உறைந்து குழந்தைகள் குழந்தைகள் உயிரிழக்கலாம் என்ற அச்சத்தால், மீட்புக் குழுவினர் விரைவாக இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
இதனால்தானே போர் வேண்டாம், வேண்டாம் என கதறுகிறது உலகம்!