உக்ரைனின் முன்வரிசை நகரை கைப்பற்றிய ரஷ்யா: குர்ஸ்க் பிராந்தியத்தில் கடுமையான சண்டை
உக்ரைன் முன்வரிசை நகரான குராகோவ்-வை கைப்பற்றி இருப்பதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனிய நகரை கைப்பற்றிய ரஷ்யா
உக்ரைனின் கிழக்கு டோனெட்ஸ்க்(Donetsk) பிராந்தியத்தில் உள்ள குராகோவ்(Kurakhove) நகரை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளன.
முக்கியமான போக்குவரத்து மையமான போக்ரோவ்ஸ்க் நோக்கிய ரஷ்யாவின் தொடர்ச்சியான முன்னேற்றங்களின் ஒரு பகுதியாக இந்த கைப்பற்றல் நிகழ்ந்துள்ளது.
ரஷ்யா வெற்றியை அறிவித்தாலும், போக்ரோவ்ஸ்க்கிலிருந்து(Pokrovsk) 35 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள குராகோவ் நகரை இழந்ததாக உக்ரைன் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட உக்ரைனின் எதிர் தாக்குதலால் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் கடுமையான சண்டை வெடித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள படத்தில் குராகோவ் நகரில் ரஷ்ய கொடியை ஏந்தி வீரர் ஒருவர் இருப்பதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |