ஒரே மாதத்தில் 54,000 வீரர்களை இழந்த ரஷ்யா: பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஜெலென்ஸ்கி
Russian Forces Lost 54000 soldiers in October: அக்டோபர் மாதத்தில் மட்டும் ரஷ்ய படைகளுக்கு வரலாறு காணாத வீரர்கள் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
54,000 வீரர்களை இழந்த ரஷ்யா
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தாக்குதலானது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்த கருத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 54,400 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டோ அல்லது படுகாயமடைந்தோ கடுமையான இழப்பை சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு இது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி, அக்டோபர் 21ம் திகதி ரஷ்யாவிற்கு போரின் மிகவும் மோசமான நாளாக அமைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 21ம் திகதி மட்டும் 2,250 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அக்டோபர் மாதத்தில் மட்டும் உக்ரைனிய படைகள் 96.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதியை உக்ரைனிய படைகள் மீட்டெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய நிலப்பரப்பை விட இது 10.4 சதுர கிலோ சதுர கிலோ மீட்டர் அதிகம் என்று உக்ரைனிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
போர் நடவடிக்கையால் நிகழ்ந்து வரும் மனித உயிரிழப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த ரஷ்யா தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியதுடன், போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஷ்யா தூதரக வழி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.