உக்ரைனின் இந்த நகருக்காக ஓராண்டுக்கு மேல் நடைபெறும் சண்டை: டிரம்புக்கு ஜெலென்ஸ்கி கோரிக்கை
உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மூலோபாய நகரை குறிவைக்கும் ரஷ்யா
ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய மூலோபாய நகரான போக்ரோவ்ஸ்கை(Pokrovsk) கைபற்ற தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.
குபியான்ஸ்க் பகுதிக்கு அருகே அமைந்துள்ள குழாய் வழித்தடத்தை பயன்படுத்தி இந்த தாக்குதலுக்காக ரஷ்ய படைகள் தங்கள் துருப்புகளை அனுப்பி வருகின்றனர்.

One in, one out திட்டத்தை செயல்படுத்த திணறும் பிரித்தானியா: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்ஸ் செல்லும் விமானங்கள்
ஒராண்டுக்கு மேலாக போக்ரோவ்ஸ்க் நகரை கைபற்ற ரஷ்யாவின் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் அதனை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக தடுத்து வருகின்றனர்.
இருப்பினும் தீவிரமடைந்து போர் நிலவரம் காரணமாக கள சூழ்நிலை தொடர்ந்து மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரம்புக்கு ஜெலென்ஸ்கி கோரிக்கை
இந்த இக்கட்டான போர் சூழ்நிலைக்கு மத்தியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மீதான தடைகள் மற்றும் உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |