மலிவு விலையில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி... ரஷ்யாவில் உச்சமடைந்த எரிபொருள் தட்டுப்பாடு
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளைக் குறைப்பதால், ரஷ்யாவில் சில எரிபொருள் தரங்களின் பற்றாக்குறை நிலவுகிறது.
ட்ரோன் தாக்குதல்
வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் தகவலின்படி, அதிக கடன் செலவுகள் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களால் எரிபொருளை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயைக் குறைக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி முனையங்களை குறிவைத்து ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் சமீபத்திய வாரங்களில் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
இது உள்நாட்டு அதிருப்தியைத் தூண்டிவிட்டு ரஷ்யாவை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தள்ளும் என்றே உக்ரைன் நம்புகிறது. திட்டமிட்ட இந்த தாக்குதல்கள் சில நாட்களில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகக் குறைத்துள்ளன மற்றும் முக்கிய துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியைக் குறைத்துள்ளன.
ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷ்யா அதன் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வெண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவில் டீசல் அதிக அளவில் உபரியாக உள்ளது, ஆனால் அதன் பெட்ரோல் உற்பத்தி உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்கிறது,
பற்றாக்குறை
அதாவது சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் குறைவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் கிரிமியா ஆகிய பிரதேசங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் பற்றாக்குறையை சந்தித்தன.
வோல்கா நதிப் பகுதியிலும், தெற்கு மற்றும் மத்திய ரஷ்யாவிலும் இதே போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளன. மேலும், எண்ணெய் நிறுவனங்களுடன் இணைக்கப்படாத தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களிலேயே தற்போது அதிகமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதாவது 17% அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பெட்ரோல் சேமித்து வைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் இன்னும் பரவலாக வழக்கம் போல் இயங்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |