ரஷ்ய விமானப்படை தளபதியை தலையில் சுட்ட மர்ம நபர்: உயிருக்கு போராட்டம்
Russian major general varpakhovich being shot in head: மர்ம நபர் ஒருவர் தலையில் சுட்டதில் ரஷ்ய விமானப்படை தளபதி உயிருக்கு போராடி வருகிறார்.
ரஷ்ய அணு ஆயுத குண்டுவீச்சு விமானப்படை தளபதி வார்பகோவிச், மர்ம நபரால் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானதால் உயிருக்கு போராடி வருகிறார்.
கனரக குண்டுவீச்சு விமானப்படை தளபதி
ரஷ்யாவின் 22வது கனரக குண்டுவீச்சு விமானப்படை தளபதியாக இருப்பவர் மேஜர் ஜெனரல் நிகோலாய் வார்பகோவிச் (56).
உக்ரைனிய குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக இவர் கருதப்படுகிறார்.
இந்த நிலையில், நிகோலாயின் வீட்டிற்கு வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டுவந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்.
இதில் தலையில் குண்டுபட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகோலாய் உயிருக்கு போராடி வருவதாகக் கூறப்படுகிறது.
எங்கெல்ஸ் மாவட்டத்தின் புரோபுஷ்தேனியே கிராமத்தில், அவர் முகத்திலும் வயிற்றிலும் துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |