புடின் படுகொலை... ரஷ்ய இராணுவ தளபதிகளுக்கு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை
உக்ரைன் மீதான படையெடுப்பை ஒப்புக்கொள்ளாத ரஷ்ய இராணுவ தளபதிகள், ஜனாதிபதி புடினை ரகசியமாக படுகொலை செய்ய வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மனக்குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்யத் தவறியதாலையே இன்னொரு பத்தாண்டுகளுக்கு ரஷ்யா அவரது இரும்புப்பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.
புடின் படுகொலை தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கு ஒப்பான கருத்தை அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் வெளியிட்டுள்ளார்.
ஜூலியஸ் சீசர் மற்றும் அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராக நடந்த சதித்திட்டம் போன்று நடவடிக்கைகளை முன்னெடுக்க துணிவான எவரும் இல்லையா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளே பாதிக்கப்படும் அளவுக்கு ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பை நிறுத்த புடின் படுகொலை செய்யப்பட வேண்டும் எனவும் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கோரியிருந்தார்.
இது உங்கள் நாட்டுக்காக, இந்த உலகிற்காக ஆற்றும் சேவை எனவும், ரஷ்ய இராணுவ தளபதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் மீதான நடவடிக்கைகள் எதுவும் ரஷ்ய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியான நிலையில்,
குறிப்பிட்ட சில ரஷ்ய இராணுவ தளபதிகள் உக்ரைன் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக, சமீப நாட்களாக புடின் படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
மட்டுமின்றி, உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் போர் குற்றங்கள் அம்பலமானதை அடுத்து, ரஷ்ய மக்கள் போருக்கு எதிராக களமிறங்கியதும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, உக்ரைன் குடியிருப்பு பகுதிகளில் கொத்து குண்டுகள் மழையாக பொழிவதை காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை சரவ்தேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் போர்குற்ற கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் ஒரே வாரத்தில் ரஷ்ய ரகசிய கூலிப்படையால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மூன்று முறை படுகொலையில் இருந்து தப்பினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதுவும், ரஷ்ய இராணுவ தரப்பில் இருந்தே அவருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளதும், அதனாலையே அவர் உயிர் தப்பியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
தற்போது, விளாடிமிர் புடினுக்கு எதிரான சதித்திட்டங்களுக்கு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி Dmitry Medvedev உதவி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புடினுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் தோல்வியை தழுவினால் அது அவரை மேலும் பல ஆண்டுகள் ஆட்சியில் தொடர அனுமதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர்.