ரஷ்ய தளபதிகள் கூட்டு ஆலோசனை... உக்ரைனுக்கு காத்திருக்கும் பேரிடி: அம்பலப்படுத்திய உளவாளிகள்
இந்த ஆலோசனைகளில் ஜனாதிபதி புடின் பங்கேற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ரஷ்ய தளபதிகள் உக்ரைனில் அணு ஆயுதம் பயன்பாடு தொடர்பில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள். இதனால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய தளபதிகள் எங்கே எப்போது அணு ஆயுதம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Credit: Russian Ministry of Defence
ஆனால் இந்த ஆலோசனைகளில் ஜனாதிபதி புடின் பங்கேற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. கசிந்துள்ள தகவல் உண்மையாக இருக்கவே வாய்ப்பு என குறிப்பிட்டுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி, நாம் இந்த தகவலை உதாசீனப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் மொத்தம் 6,000 அணு ஆயுதங்களின் குவியல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
@reuters
இதனால் உலகம் மொத்தமும் 200 முதல் 300 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம் என கூறுகின்றனர். மேலும், போருக்கு பயன்படுத்தக்கூடிய 2,000 அணு ஆயுதங்களும் ரஷ்யா உருவாக்கி வைத்துள்ளது.
இப்படியான அணு ஆயுதத்தில் மிக சிறிய ஒன்றை பயன்படுத்தினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், பல ஆண்டுகளுக்கு அப்பகுதி வாழ முடியாததாகிவிடும். உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமானால், அது கடந்த 70 ஆண்டுகளில் முதன்முறை என்றே கூறுகின்றனர்.
@AP