விழா மேடையில் Z முத்திரை அணிந்து வந்த ரஷ்ய வீரரால் பரபரப்பு
ரஷ்யா கடந்த 24ம் தேதி முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக மக்களும், பல நாடுகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே கத்தாரில் நடந்து வரும் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டடிக் உலகக்கோப்பை போட்டியில் ரஷ்ய வீரர் ஒருவர், Z முத்திரை பதிக்கப்பட்ட டி ஷர்டை அணிந்து வந்ததால் பரபரப்பானது.
அதாவது, ’பாரலல் பார்ஸ்’ எனப்படும் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில், உக்ரைனைச் சேர்ந்த இலியா கோவ்டுன் தங்கப் பதக்கமும், கசாக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிலாட் கரிமி வெள்ளிப்பதக்கத்தையும், ரஷ்யாவின் இவன் குலியாக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பதக்கம் வாங்குவதற்காக வீரர்கள் மேடைக்கு வந்த போது, Z முத்திரை பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து வந்த ரஷ்ய வீரர், கசாக்ஸ்தான் வீரருடன் கை குலுக்கி சென்றார், ஆனால் உக்ரைனை வீரரை கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பானது.