ஐரோப்பா முழுவதும் குளிர்சாதனப்பெட்டிகள் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா
Russian hackers behind Europe-wide fridge cyber attack: ஐரோப்பா முழுவதும் குளிர்சாதனப்பெட்டிகள் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்ய ஹேக்கர்கள்.
ஐரோப்பா முழுவதும் குளிர்சாதனப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்து, பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்திய ஹேக்கர்கள், ரஷ்யாவிலிருந்து செயல்படுவதாகத் தெரிகிறது என்று முன்னணி சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யார் இருக்கக்கூடும்
கடவுச்சொற்களை 12345 இலிருந்து மாற்றாத நெட்வொர்க்குகளை மட்டுமே குறிவைத்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பல்பொருள் அங்காடிகளில் Supervisor என்ற பயனர் பெயரையும் '12345' என்ற கடவுச்சொல்லையும் பயன்படுத்தி வருவதைக் கண்டுபிடித்த ஹேக்கர்கள், பின்னர் குளிரூட்டிகளின் (freezers) வெப்பநிலையை அதிகரிக்கச் செய்ததாகத் தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள், தொழிற்சாலை அமைத்த இயல்புநிலை அமைப்பிலேயே (default factory setting) இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், நீர் தொழில் துறை மற்றும் எரிவாயு, மின்சார விநியோகக் கட்டமைப்புகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்களின் முக்கிய அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் அல்லது அவர்களின் நோக்கங்கள் என்ன என்பது குறித்து, இந்தக் கட்டத்தில் உறுதியான பதிலை அளிப்பது கடினம் என்றே பிரித்தானியாவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகின்றனர்.

செவ்வாய்க்கிழமையன்று, பிரித்தானியாவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள், குளிர்சாதன அமைப்புகளை முடக்கும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை GCHQ-வின் சைபர் பாதுகாப்புத் தலைவர் வெளிப்படுத்தினார்.
ஹேக்கர்கள் தெர்மோஸ்டாட்களை மீறிச் செயல்படுவதற்கு முன்பு வெப்பநிலை எச்சரிக்கை கருவிகளைச் செயலிழக்கச் செய்ததால், காலம் கடந்த பின்னரே கடை மேலாளர்கள் இதை அறிந்தனர்.
மிகவும் சவாலான
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளக்கூடிய, பெரும் சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய சைபர் தாக்குதல்களின் தொடக்க நிலை இது என தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரிச்சர்ட் ஹார்ன் எச்சரித்துள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளைக் குற்றவாளிகள் ஊடுருவிச் செல்ல செயற்கை நுண்ணறிவு அனுமதிப்பதால், சம்பவங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதே நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான ஆபத்து என்று அவர் கூறினார்.
பிரித்தானியாவிற்கு ரஷ்யாவே மிகவும் சவாலான சைபர் அச்சுறுத்தலாக குறிப்பிடப்படுகிறது; போலந்தின் மின் கட்டமைப்பின் மீது நடத்தப்பட்டது போன்ற கலப்புத் தாக்குதல்கள் (hybrid attacks) ரஷ்யாவால் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.
தேசிய நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்படக்கூடும் என்பதால், பிரித்தானியாவில் வசிக்கும் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் எச்சரித்துள்ள நிலையிலேயே, குளிர்சாதனப்பெட்டிகள் மீதானத் தாக்குதல்கள் தொடர்பிலானத் தகவல்கள் வெளிவருகின்றன.