எந்நேரத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம்! அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸில் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா மறுத்துள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் செய்தியாளர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் உடனான அதன் எல்லையில் ரஷ்யா கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.
ஆகவே, குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது உட்பட எந்த நேரத்திலும் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா தொடங்கலாம்.
உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனே அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளோம் என பிளிங்கள் தெரிவித்துள்ளார்.