திடீர் நெருக்கடி... பிரான்ஸ், ஜேர்மனி நாடுகளிடம் உதவி கேட்ட உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்ய ஊடுருவலை துணிச்சலுடன் எதிர்கொண்டுவரும் உக்ரைன் துருப்புகள், ஆயுதங்களின் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான கொடூர தாக்குதல்களை சமாளிக்க, மேலும் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது. தற்போது கைவசம் இருக்கும் ஆயுதங்கள் இன்னும் சில நாடகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் உக்ரைன் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் சமீப நாட்களில் அளித்துள்ள ஆயுதங்கள் பேருதவியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba.
மேலும், ஆயுதங்கள் அளிப்பதாக உறுதி அளித்துள்ள சில நாடுகள், அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ஒருவார காலத்திற்கு தேவையான பொருட்களை வெறும் 20 மணி நேரத்தில் பிரித்தானியா அளிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆயுதங்கள் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ரஷ்ய துருப்புகளிடம் இருந்து கைப்பற்றியுள்ள வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் துருப்புகள் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.