பிரித்தானியாவை நெருங்கி வந்த ரஷ்ய ஜெட் விமானம்: துரத்தியடித்த ராயல் விமானப்படை
பிரித்தானியாவை நெருங்கி வந்த ரஷ்ய ஜெட் விமானத்தை ஞாயிற்றுக்கிழமை ராயல் விமானப்படை(RAF) விமானங்கள் இடைமறித்தனர்.
ரஷ்ய விமானம் இடைமறிப்பு
ஞாயிற்றுக்கிழமை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் நோர்வே கடல் பரப்பில் இருந்து ரஷ்யாவின் கடல்சார் ரோந்து ஜெட் விமானம் Tu-142 பிரித்தானியாவை நோக்கி நெருங்கி வந்தது.
இந்நிலையில் ஸ்காட்லாந்தின் வடக்கே உள்ள லாசிமவுத்தில் இருந்து ராயல் விமானப்படையின்(RAF) டைபூன்(Typhoons) ரக ஜெட் விமானங்கள் விரைவாக ரஷ்ய ஜெட் விமானங்களை இடைமறிக்க அனுப்பட்டது.
Sky News
விரைவான ஜெட் விமானங்கள் 24/7 என்ற கணக்கில் எப்போதும் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு இருப்பதால், அத்துமீறி நுழைய முற்பட்ட ஜெட் விமானங்கள் துரத்தப்பட்டன.
இதற்கிடையில் ரஷ்ய ஜெட் விமானங்கள் பிரித்தானிய வான்வெளிக்குள் நுழையவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sky News
அத்துமீறும் ரஷ்ய ஜெட் விமானங்கள்
இவ்வாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பால்டிக் கடலுக்கு மேல் பரப்பில் அதாவது நோட்டோ வான்வெளிக்கு அருகில் 2 ரஷ்ய போர் விமானங்களும், ஒரு உளவு விமானமும் அத்துமீறி பறந்தன.
இதையடுத்து ஜேர்மன் விமானப்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த RAF விமானிகள் மூன்று ரஷ்ய விமானங்களை இடைமறித்தனர்.
அத்துடன் அதை வழக்கமான இடைமறிப்பு என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
Sky News