நோபல் பரிசை விற்று 103 மில்லியன் டொலர்கள்..உக்ரைனுக்கு கொடுத்த ரஷ்ய ஊடகவியலாளர்! குவியும் பாராட்டுக்கள்
ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர் தனக்கு கிடைத்த நோபல் பரிசை விற்று, உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நிதியாக அளித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரை இழந்தனர். இதனால் பல குழந்தைகள் தங்கள் குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு குழந்தைகளுக்கு உதவ ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவர் செய்த காரியம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் டிமிட்ரி முரடோவ், அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் 5 லட்சம் டொலரை பெற்றார். தனக்கு கிடைத்த பரிசுத்தொகை 5 லட்சம் டொலரை, யுனிசெப் அமைப்புக்கு வழங்குவதாக டிமிட்ரி அறிவித்திருந்தார். இந்த நிலையில், உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனது நோபல் பரிசு பதக்கத்தை ஏலம் விட்டார்.
அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் அவரது நோபல் பரிசு ஏலம் விடப்பட்டது.
ஹெரிடேஜ் எனும் நிறுவனம் இதனை 103 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
Photo Credit: REUTERS/David 'Dee' Delgado
இந்த தொகை முழுவதையும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐ.நா சிறுவர் நிதியத்திற்கு டிமிட்ரி முராடோவ் வழங்கியுள்ளார். அவரது இந்த செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து டிமிட்ரி கூறுகையில், 'இன்று மிக முக்கியமான செய்தி என்னவென்றால், ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், மிகவும் துன்பப்படும் மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என்பதே' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: REUTERS/David 'Dee' Delgado