உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் மொத்த எண்ணிக்கை: முதன்முறையாக வெளியான தரவுகள்
15 மாதங்களுக்கு முன்னர் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இதுவரை கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை முதன்முறையாக கணக்கிடப்பட்டுள்ளது.
புடினின் நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு
உக்ரைன் போரில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனின் தலைமையால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் துல்லியமானவை என்று பலர் அறிக்கையிட்டு வருகின்றனர்.
@getty
ஆனால் தற்போது விளாடிமிர் புடின் நிர்வாகத்திற்கு எதிரான ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்று இன்னும் துல்லியமான புள்ளிவிவரங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 40,000 முதல் 55,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுமார் 70,000 வீரர்கள் மிக மோசமாக படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் இனி ராணுவத்தில் பணியாற்றுவது கடினம் என்றே தெரிவித்துள்ளனர்.
இந்த 15 மாத சண்டையில், 10 ஆண்டு கால ஆப்கானிஸ்தான் போரில் சோவியத் துருப்புகள் கொல்லப்பட்டதை விட மூன்று மடங்கு இழப்புகளை ரஷ்யா எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போகும்
மேலும், 1994 மற்றும் 1996 க்கு இடையில் நடந்த முதல் ரஷ்ய-செச்சென் போரை விட ஒன்பது மடங்கு அதிகமான வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளனர்.
@getty
உக்ரைன் படையெடுப்பு தொடங்கிய பின்னர், கடைசியாக செப்டம்பர் 21ம் திகதி ரஷ்யா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், அதுவரை 5,937 வீரர்களை மட்டுமே ரஷ்யா இழந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், அந்த எண்ணிக்கை என்பது அப்போதே பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்பட்டது. மேலும், உக்ரைனில் சண்டையிடுவதற்காக ரஷ்யா ஏராளமான சிறைக் கைதிகளை விடுவித்துள்ளது, அவர்களின் மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |