2 கால்கள் இல்லாமலே எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நபர்

Nepal Russia
By Karthikraja May 23, 2026 06:25 AM GMT
Report

நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரம், பிரபல சுற்றுலாத்தளமாக உள்ளது.

இந்த சிகரம் சுமார் 29,000 அடி உயரமுள்ளது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான இங்கு மலையேற்றம் செய்து வருகின்றனர்.

ஆனால், உயரம் செல்ல செல்ல கடுமையான பனி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இதில் உள்ளது. பனிச்சரிவு, கீழே விழுதல், உடல்நலப்பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், முதல்முறையாக இரு கால்களை இழந்த நபர், செயற்கை கால்களை பொருத்தாமல், கைகளை பயன்படுத்தி எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 

2 கால்கள் இல்லாமலே எவெரெஸ்ட்டில் ஏறி சாதனை

ரஷ்யா வான்படை வீரரான ருஸ்தம் நபீவ் கடந்த 2015 ஆம் ஆண்டில், ராணுவ முகாமில் உறங்கிக் கொண்டிருந்தபோது முகாம் இடிந்து விழுந்ததில், தனது இரு கால்களையும் இழந்தார்.  

2 கால்கள் இல்லாமலே எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த நபர் | Russian Lost Legs Climbed Everest Using Only Arms

ஆனால், இதை காரணமாக வைத்து அவர் முடங்கிவிடவில்லை. செல்வாக்குமிக்க வலைப்பதிவராகவும், உடற்பயிற்சியாளராகவும் மாறினார்.

மேலும், உயரமான சிகரங்களில் ஏறி, வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னுதாரணமாக மாறினார். 

2020 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான எல்ப்ரஸ் மலையில் ஏறினார்.

அதைத்தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் மனாஸ்லு மலை, கிளிமஞ்சாரோ மற்றும் கஸ்பெக் மலைகளிலும், மேலும் 2022 ஆம் ஆண்டில் தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவாவிலும் ஏறியுள்ளார். 

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும் போது 2 இந்தியர்கள் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும் போது 2 இந்தியர்கள் உயிரிழப்பு

இந்நிலையில், உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட்டில் ஏற முயற்சித்த அவர், மே 20 ஆம் திகதி நேபாள நேரப்படி காலை 8:16 மணிக்கு எவெரெஸ்ட் சிகர உச்சியை அடைந்தார். 

இதன் மூலம், இரு கால்களை இழந்து, செயற்கை உறுப்புகள் இல்லாமல் உலகின் மிக உயரமான மலைச்சிகரத்தில் ஏறிய முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

எவெரெஸ்ட் உச்சியில் இருந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வீழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தவர்களுக்கு. ருஸ்தம் நபீவ், எவரெஸ்ட் 2026” என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US