செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ பதிவர் கொல்லப்பட்ட வழக்கில் பெண் கைது
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய வலைப்பதிவர் விளாட்லன் டாடர்ஸ்கி கொலைப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து வர்ணனை வழங்கி வந்த இராணுவ வலைப்பதிவர் விளாட்லன் டாடர்ஸ்கியை குறி வைத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் வர்ணனையாளர் விளாட்லன் டாடர்ஸ்கி(Vladlen Tatarsky) உயிரிழந்ததுடன், இந்த வெடிப்பில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் அவர்களில் 10 பேருக்கு மேல் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sky News
40 வயதுடைய டாடர்ஸ்கியின் உண்மையான பெயர் மாக்சிம் போமின், இவர் டெலிகிராமில் 5,60,000க்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை கொண்டிருந்தார்.
உக்ரைன் போர் குறித்து வர்ணனை வழங்கிய இராணுவ பதிவர்களில் டாடர்ஸ்கி மிகவும் முக்கியமானவர் என்று கருதப்படுகிறது.
பெண் ஒருவர் கைது
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 26 வயதான டாரியா ட்ரெபோவா என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sky News
குண்டுவெடிப்பு நடப்பதற்கு சற்றுமுன் சந்தேகிக்கப்படும் பெண், வர்ணனையாளர் விளாட்லன் டாடர்ஸ்கி-க்கு மார்பளவு சிலை ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த சிலையிலேயே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Sky News