உக்ரைன் தாக்குதலில் ரஷ்யாவின் முக்கிய ராணுவ தலைவர் படுகொலை!
உக்ரைனின் கார்கிவ் அருகே இடம்பெற்ற மோதலில் ரஷ்யாவின் முக்கிய ராணுவ தலைவர் உள்பட பல மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை வெளியிட்ட செய்தியில், எதிரி நாட்டு படைகள் மேலும் ஒரு மூத்த தளபதியை இழந்துள்ளது.
கார்கிவ் அருகே இடம்பெற்ற மோதலில், ரஷ்யாவின் மேஜர் ஜெனரல், தலைமைத் தளபதி மற்றும் மத்திய ராணுவ மாவட்டத்தின் 41வது ராணுவப்படையின் முதல் துணைத் தளபதி Vitaly Gerasimov கொல்லப்பட்டார்.
இந்த மோதலில் மேலும் பல மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.
Vitaly Gerasimov, 2வது செச்சென் போர் மற்றும் சிரியாவில் நடந்த ரஷ்ய ராணுவ நடவடிக்கையில் பங்கேற்றவர். மேலும், கிரிமியாவை மீட்தற்காக அவர் பதக்கம் பெற்றார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, எதிரிகள் ராணுவத்தில் தகவல்தொடர்பு மற்றும் அவர்களின் காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
எனினும், Vitaly Gerasimov கொல்லப்பட்டது தொடர்பில் ரஷ்யா தரப்பில் இருந்து தற்போது வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.