சைபீரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்து: 19 பேர் வரை உயிரிழப்பு
Russian military plane accident 19 killed: சைபீரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ரஷ்ய ராணுவ விமானம்
சைபீரியாவில் நேற்று இரவு ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
அன்டோனோவ் ஆன் -12 என்ற ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் பயணித்த 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சைபீரியாவின் கெமரோவோ பகுதியில் இந்த விமான விபத்தானது ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம்
விமானத்தின் 4 என்ஜின்களில் ஒன்றில் ஏற்பட்ட எரிபொருள் கசிவின் காரணமாகவே விமானம் தீப்பிடித்து அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து புலனாய்வு ஆணையம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.