போர்நிறுத்த பேச்சுக்கு ஐரோப்பிய தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும்? ரஷ்ய அமைச்சர்
போரைத் தொடரும் நோக்கத்துடன் ஐரோப்பிய தலைவர்கள் அமரப் போகிறார்கள் என்றால், ஏன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்? என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை நிறுத்த சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் புடினின் வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் யுரி உஷாகவ் ஆகியோர் ரஷ்யாவின் சார்பில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்பது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
அவர் கூறுகையில், "உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்பதற்கு எந்த காரணமும் இல்லை. போரைத் தொடரும் நோக்கத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் அமரப் போகிறார்கள் என்றால், அவர்களை ஏன் அங்கு அழைக்க வேண்டும்?" என மாஸ்கோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எப்போதாவது நிறைவேறினால் ரஷ்யாவும், உக்ரைனும் விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துகிறது.
ஆனால், பல ஆண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் உக்ரைன் பிரதேசத்தில் மாஸ்கோ சமரசம் செய்யாது என்றும், பேச்சுவார்த்தைகளின்போது அதைப்பற்றி ஒரு சிந்தனை கூட இருக்க முடியாது என்றும் கூறினார்.
இதற்கிடையில் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகிய உக்ரேனியப் பகுதிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துக் கொண்டதாக கிரெம்ளின் கூறுகிறது.
TATYANIA MAKEYEVA/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |