நாவை அடக்குங்கள்... பிரான்சுக்கு எதிராக நிஜ போர் வெடிக்கலாம்: பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய அமைச்சர்
உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார போரை பிரகடனம் செய்வதாக பிரான்ஸ் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின .
பிரான்ஸ் பொருளாதார அமைச்சரான Bruno Le Maire, தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றின்போது, ரஷ்யாவுக்கெதிராக பொருளாதாரத் தடைகள் விதித்து, ரஷ்ய பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துவிடுவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் ரஷ்ய அதிபரும், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான Dmitry Medvedev என்பவர், பிரான்சுக்கு எதிராக காரசாரமான மிரட்டல் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், ‘இன்று யாரோ ஒரு பிரான்ஸ் அமைச்சர் ரஷ்யா மீது பொருளாதாரப் போர் தொடுப்பதாக தெரிவித்துள்ளார். நாவை அடக்குங்கள், மனித வரலாற்றில் பொருளாதாரப் போர்கள் உண்மையான போர்களாக மாறியுள்ளதை மறக்கவேண்டாம்’ என எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார் Medvedev.
இந்த Medvedev 2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராகவும், 2012 முதல் 2020 வரை ரஷ்ய பிரதமராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.