வரவழைத்து அவமானப்படுத்திய வடகொரியா: ரஷ்ய அமைச்சர்களை தர்மசங்கடப்படுத்திய காட்சிகள்
ரஷ்ய ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மரபை மீறியதாகக் கூறி, ரஷ்ய அமைச்சர்களை வடகொரிய அதிகாரிகள் அவமதிக்கும் காட்சி ஒன்றைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய அமைச்சர்களை தர்மசங்கடப்படுத்திய சம்பவம்
ரஷ்ய ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரான Sergey Lavrov உட்பட ஏழு அமைச்சர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் வடகொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், மரபை மீறியதாகக் கூறி, ரஷ்ய அமைச்சர்களை வடகொரிய அதிகாரிகள் அவமதிக்கும் காட்சி ஒன்றைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் சந்திக்கும் அறைக்கு, ரஷ்ய அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்றுள்ளார்கள். அவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்க, அந்த அறைக்குள் வந்த வடகொரிய அதிகாரி ஒருவர், இங்கே என்ன செய்கிறீர்கள், அறையை விட்டு வெளியே போங்கள் என கூறியுள்ளார்.
எங்களுக்கென்று ஒரு மரபு உள்ளது, முதலில் ஜனாதிபதிகள் அறைக்குள் வருவார்கள், நாங்கள் உங்களை வரவேற்போம், அதற்குப் பிறகுதான் நீங்கள் உள்ளே வரவேண்டும் என்று அவர் கூற, ரஷ்ய அமைச்சர்களும் அதிகாரிகளும் அந்த அறையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இந்த காட்சி, வடகொரிய அரசு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகியுள்ளது. பின்னர் மீண்டும் ஒளிபரப்பு துவங்க, புடினும் கிம்மும் அறைக்குள் நுழைவதைக் காட்டும் காட்சியும், அதைத் தொடர்ந்து மற்றவர்கள் அவர்களை பின்தொடரும் காட்சிகளும், பரஸ்பர பாதுகாப்பு திட்ட ஒப்பந்தம் ஒன்றில் புடினும் கிம்மும் கையெழுத்திடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |