உக்ரைன் நகரொன்றில் சமையலறைக்குள் விழுந்த ரஷ்ய ஏவுகணை: ஒரு திடுக் காட்சி
பொதுமக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டே, மீண்டும் மீண்டும் குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷ்ய படைகள்.
அதற்கு மிகத் தெளிவான ஆதாரமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நேற்று, Kharkiv நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில், ஏவுகணை ஒன்று ஒரு வீட்டின் சமையலறை கூரையைப் பிய்த்துக்கொண்டு அங்கிருந்த சிங்குக்குள் (kitchen sink) விழுந்துள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை. அது வெடித்திருந்தால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், அது வெடிக்காததால் அந்த வீட்டிலுள்ள சிங்க் மட்டுமே சேதமடைந்துள்ளது.
உக்ரைன் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை சோதிப்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
போர்ச்சூழலின் பயத்தின் மத்தியிலும், அந்த வெடிக்காத ஏவுகணையை கேலி செய்யத் தவறவில்லை மக்கள். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவைப் பார்வையிட்ட மக்கள், ரஷ்யாவை ஏடாகூடமாக கேலி செய்துவருகிறார்கள்.