உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
Russian missile hits Mittals Ukraine steel plant: உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலதிபர்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் அமைந்துள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் ArcelorMittal எஃகு ஆலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 14 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆலையின் முக்கியமான ஆற்றல் மற்றும் உலைப்பிரிவுகள் சேதமடைந்ததால் உற்பத்தி பகுதியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
பதிலடி தாக்குதல்
இந்த தாக்குதல், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பியதற்கான பதிலடி என கூறப்படுகிறது.
அந்த ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை, 822 ட்ரோன்களை தடுத்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
மாஸ்கோ அருகே ஒரு வீட்டில் ட்ரோன் தாக்குதலால் 83 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும், ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் விற்பனை நிறுவனம் Wildberries கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
உக்ரைனின் பல நகரங்களில் கடந்த வாரம் மட்டும் 1,550 ட்ரோன்கள், 1,560 குண்டுகள் மற்றும் 62 ஏவுகணைகள் தாக்கியதாக ஜனாதிபதி ஜெ;லென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது கூட்டாளிகளிடம் கூடுதல் வான்வழி பாதுகாப்பு உதவி வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார்.
இந்த தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், போரின் தாக்கம் இரு நாடுகளிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |