உக்ரைனிய நகரை குறிவைத்த ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழப்பு
ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் சுமி நகரில் 32 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ரஷ்யப் படைகள் நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனின் சுமி நகரில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தாக்குதல், காலை 10:15 மணியளவில் நகர மையத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த பொதுமக்களை குறிவைத்து ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி, தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களில், தெருக்களில் கருப்பு சவப்பெட்டிகள் வரிசையாகக் கிடப்பதும், இடிபாடுகளுக்கு மத்தியில் அலுமினியத் தகடுகளால் மூடப்பட்ட உடல்கள் சிதறிக் கிடப்பதும் காணப்பட்டன.
உக்ரைனின் மாநில அவசர சேவை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை பின்னர் உறுதிப்படுத்தினர், மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், 10 குழந்தைகள் உட்பட 84 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெலென்ஸ்கி கண்டனம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தினார், மேலும் இரட்டை ஏவுகணைத் தாக்குதலைக் கண்டித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |