உக்ரைன் எரிபொருள் கிடங்குகளை ஏவுகணைகளால் சூறையாடிய ரஷ்ய! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரேனிய எரிபொருள் கிடங்கை சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கிய வீடியோவை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், தரையிலிருந்து ஏவப்பட்ட இரண்டு சூப்பர்சோனிக் P-800 Oniks ஏவுகணைகள், நேராக பாய்ந்து, பின் குறிவைக்கப்பட்ட பகுதி இருக்கும் திசையில் திரும்பி மின்னல் வேகத்தில் செல்கிறது.
கிரிமியாவில் இருந்து ஏவுப்பட்ட இந்த ஏவுகணைகள், உக்ரேனிய ஆயுத படைகளின் எரிபொருள் கிடங்கை குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்ககத்தின் செய்தித்தொடர்பாளர் Igor Knonashenkov கூறுகையில், ஏப்ரல் 6ம் திகதி ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில், Radekhov, Kazatin, Prosyanaya, Nikolayev, மற்றும் NovomoskovsK நகரங்களில் உள்ள மொத்தம் 5 உக்ரேனிய எரிபொருள் கிடங்கள் அழிக்கப்பட்டன.
Donbass, Nikolayev மற்றும் கார்கிவ் அருகே இயங்கிய உக்ரேனிய ராணுவ வாகனங்களுக்கு இந்த எரிபொருள் கிடங்குகளிலிருந்து தான் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்தது என Igor Knonashenkov தெரிவித்தார்.
நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்த நபர்! பரபரப்பு காணொளி
Расчет берегового ракетного комплекса "Бастион" выполнил пуск двух ракет "Оникс" по наземным целям, расположенным на территории Украины, сообщили в Минобороны России:https://t.co/kSnKkMtGfN
— ТАСС (@tass_agency) April 6, 2022
Видео: Минобороны России pic.twitter.com/6IfsbHY3Ai
தரையில் மட்டுமின்றி, ஜெட் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் மூலமாகவும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.