ரஷ்யாவின் புதிய ஏவுகணை உத்திகள் - உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய Patriot தோல்வி
ரஷ்யாவின் புதிய ஏவுகணை உத்திகள், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய Patriot ஏவுகணை அமைப்புகளுக்கு சவாலாக மாறியுள்ளன.
Financial Times வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யா தனது Iskander-M மற்றும் Kinzhal வகை ஏவுகணைகளை மேம்படுத்தி, அவை பயணிக்கும் பாதையை மாற்றும் திறனுடன் உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய Patriot ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணைகள் இலக்கை அடையும் முன் திடீரென திசைமாற்றம் செய்யும், உடனடியாக செங்குத்தாக டைவ் செய்து, Patriot ஏவுகணை அமைப்பை குழப்பத்தில் ஆழத்தி அவற்றை தடுப்பதில் சிரமத்தை உண்டாக்கும்.
உக்ரைன் விமானப்படை தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 37 சதவீதம் ஏவுகணைகள் தடுக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பரில் அந்த விகிதம் 6 சதவீதமாக குறைந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை அறிக்கையிலும், ரஷ்யாவின் இந்த புதிய உத்திகள் உக்ரைனின் பாதுகாப்பு திறனை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28-ஆம் திகதி ஏவப்பட்ட 7 ஏவுகணைகளில் ஒன்றை மட்டுமே உக்ரைன் வெற்றிகரமாக தடுத்தது. ஜூலை 9-ஆம் திகதி 13 ஏவுகணைகளில் 6 இலக்கை அடைந்தன.
மேலும், ரஷ்யா கீவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 4 ட்ரோன் உற்பத்தி நிலையங்களை தாக்கியுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் திகதி Bayraktar ட்ரோனுக்கான உபகரணங்கள் உருவாக்கும் மையம் மற்றும் EU, British Council அலுவலகங்கள் சேதமடைந்தன.
இந்த மாற்றங்கள், உக்ரைனின் பாதுகாப்பு உத்திகளை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் ரஷ்யா தனது யுத்த உத்திகளை மேம்படுத்தி வருவதை காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |