உக்ரைன் நகரத்தை தாக்கிய 3 ரஷ்ய ஏவுகணைகள்: 17 பேர் மரணம்.. இணையத்தில் வெளியான வீடியோ
உக்ரைனின் வின்னிட்சியா நகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய ஏவுகணைகள் மத்திய உக்ரைனில் உள்ள வின்னிட்சியா நகரத்தில் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மற்றும் கலாச்சார மையத்தைத் தாக்கியதில் ஒரு குழந்தை மற்றும் தாய் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போர் நடக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வின்னிட்சியா நகரத்தில் அதிகாலையில் மக்கள் நிறைந்திருந்த தெருக்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மிகப்பெரிய வணிக மையம், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அது நகரம் முழுவதும் அடர்த்தியான கரும் புகையை பரப்பியது.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு நாளும் ரஷ்யா பொதுமக்களை அழித்து, உக்ரேனிய குழந்தைகளை கொன்று, இராணுவம் எதுவும் இல்லாத பொதுமக்களின் இலக்குகளை நோக்கி ராக்கெட்டுகளை செலுத்துகிறது. இது வெளிப்படையான பயங்கரவாதச் செயல் இல்லையென்றால் என்ன? கொலையாளி நிலை. பயங்கரவாத அரசு."என்று விளாடிமிர் புடினின் ரஷ்யாவை குற்றம்சாட்டினார்.
Three russian rockets landed in residential area of Vinnytsia city just now. Six people are wounded and two more dead.
— Tanya Kozyreva (@TanyaKozyreva) July 14, 2022
Final numbers are unknown.
Vinnytsya is the city where I grew up and it feels like my childhood is in fire today. pic.twitter.com/m2DiawHmLe
ஆரம்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது, ஆனால் பின்னர் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக புதுப்பிக்கப்பட்டது.
தகவலைலன்படி, கருங்கடலில் இருந்து ரஷ்ய படைகளால் 7 கப்பல் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் 4 உக்ரேனிய வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டதாகவும், 3 நகரத்தை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Three russian missiles hit a business centre in the city of Vinnytsia. Casualties among civilians are reported.
— Defence of Ukraine (@DefenceU) July 14, 2022
Ukraine has already suffered almost 3,000 missile strikes. The supply of sufficient amount of the Western anti-missile systems is long overdue. pic.twitter.com/JghxLuewvO
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.