உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: தலைநகர் கீவ்வில் பதற்றம்
உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெடி சத்தம் கேட்கப்பட்டது.
இதையடுத்து கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
கீவ் நகர இராணுவ நிர்வாக தலைவர் டைமூர் டகாசென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ள தகவலில், தலைநகர் கீவ்வை குறிவைத்து எதிரிப் படைகள் ஏவுகணை தாக்குதல் தொடங்கியுள்ளனர். எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கீவ் நகர மேயர் இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகளின் தாக்குதலில் டிப்ரோவ்ஸ்கி மற்றும் ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டங்கள் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் முழு அளவை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் பயன்படுத்திய ஏவுகணைகள் வகை குறித்து உக்ரைனிய படைகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
இருப்பினும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை Iskander-M அல்லது S-300/S-400 ஏவுகணையாக இருக்கலாம் என உக்ரைன் தரப்பு சந்தேகம் எழுப்பி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |