உக்ரைனில் எங்கள் மகன்கள் 'பீரங்கி தீவினமாக' பயன்படுத்தப்படுகின்றனர்: ரஷ்ய தாய்மார்கள் குற்றச்சட்டு!
உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் கிரெம்ளின் தங்கள் மகன்களை 'பீரங்கித் தீவனமாகப்' பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
சைபீரியாவில் உள்ள குஸ்பாஸ் பகுதியில் ரஷ்ய கவர்னர் செர்ஜி சிவிலேவ் (Sergey Tsivilev) மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, கோபமடைந்த ராணுவ வீரர்களின் தாய்மார்கள் கிரெம்ளின் பொய் சொல்வதாக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினர்.
வீரர்கள் வெறுமனே போரில் செலவழிக்கப்படும் பொருளாகக் கருதப்படுகிறார்கள் என்பதை 'பீரங்கி தீவினம்' (Cannon fodder) என குறிப்பிடப்படுகிறது.
அந்த காட்சிகளில் ரஷ்ய இராணுவ வீரர்களின் தாய்மார்களில் ஒருவர், “நாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டோம், அனைவரும் ஏமாற்றப்பட்டோம். அவர்கள் அங்கு பீரங்கித் தீவனமாக அனுப்பப்பட்டனர்" என்று கூறினார்.
மற்றோரு பெண், “எங்கள் மகன்கள் ஏன் அங்கு அனுப்பப்பட்டனர்? அவர்கள் இன்னும் பயிற்சி பெறவில்லை. இந்த சிறுவர்களைப் பாருங்கள், அவர்களுக்கு 20 வயது தான் ஆகிறது" என்றார்.
அதற்கு பதிலளித்த சிவிலெவ், "இது ஒரு சிறப்பு நடவடிக்கையாகும், இந்த நேரத்தில், சிறப்பு நடவடிக்கை பற்றி யாரும் கருத்து தெரிவிக்க முடியாது, இது சரியான விஷயம். அவை பயன்படுத்தப்பட்டன…” என்று கூற, அதற்கு கூட்டத்தில் இருந்து ஒரு தாய் அழைத்தார் “ என்னது பயன்படுத்தப்பட்டதா? எனவே எங்கள் குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினார்.
சிவிலெவ், நடந்துகொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை குறித்து முடிவுகளையோ அல்லது விமர்சனங்களையோ செய்ய முடியாது என்றும், "அது மிக விரைவில் முடிவடையும்" என்றும் வலியுறுத்தினார். அப்போது ஒரு தாய் "எல்லோரும் கொல்லப்படும்போது கூடவா" என்று கூச்சலிட்டார்.
உக்ரைனில் தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக போர் நடந்துள்ள நிலையில், போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 11,000-ஐ எட்டுகிறது என்று உக்ரேனிய இராணுவம் கூறியுள்ளது.
அதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உக்ரேனியர்களின் இறப்பு எண்ணிக்கை குறைந்தது 364-ஆக உள்ளது.