சேட்டை செய்யும் ரஷ்யாவின் வாலை ஒட்ட நறுக்கிய உக்ரைன்! கொழுந்துவிட்டு எரிந்த வீடியோ
ரஷ்யாவிற்கு தரும் பதிலடியாக முக்கிய சம்பவத்தை உக்ரைன் செய்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி போர் அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. போர் தாக்குதல் நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த சண்டையில் இரு நாட்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து சேட்டை செய்யும் அடங்காத ரஷ்யாவிற்கு உக்ரைனும் பதிலடி தந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தரமான சம்பவம் ஒன்றை உக்ரைன் படை அரங்கேற்றியுள்ளது. அதன்படி ரஷ்ய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் ஆயுதப் படைகள் நேற்று ரஷ்யாவின் ஆறு ஏவுகணை ராக்கெட் அமைப்புகளுடன் கூடிய இராணுவ வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை டான்பாசில் அழித்ததாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முக்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.