சொந்த நாட்டு வீரரை தோற்கடித்த ரஷ்யர்: "துரோகி" எனக் கூறி பதக்கம் கொடுத்த நிர்வாகி..சர்ச்சை வீடியோ
அல்பேனியாவிற்காக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரஷ்ய வீரரை "துரோகி" என ஒலிம்பிக் சங்க நிர்வாகி அழைத்தது சர்ச்சையாகியுள்ளது.
ஐரோப்பிய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த சாம்பியன்ஷிப்
ரஷ்யாவில் பிறந்த மல்யுத்த வீரர் Chermen Valiev, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சற்று முன்பு தனது விளையாட்டு தேசியத்தை அல்பேனியாவாக மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் Zaurbek Sidakovஐ வீழ்த்தி Chermen Valiev தங்கப் பதக்கம் வென்றார்.
அதனைத் தொடர்ந்து, விருது வழங்கும் விழாவின்போது ரஷ்ய ஒலிம்பிக் சங்க நிர்வாகி Mikhail Mamiashvili வெறுப்பை வெளிக்காட்டியபடி Chermen Valievவிற்கு ஆக்ரோஷமாக தங்கப்பதக்கத்தை அணிவித்தார்.
சர்ச்சை வீடியோ
மேலும், அவர் Chermen Valievவை வருத்தப்படுத்தும் விதமாக ஏதோ கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் "துரோகி" அந்த வீரரை அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மல்யுத்த ரஷ்யா டெலிகிராம் சேனல், "Valievவை ஒரு துரோகி என Mamiashvili அழைத்தார். அவரது வார்த்தைகளுடன் அவதூறுகளையும் சேர்த்துக் கொண்டார்" என செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ சர்ச்சையை தூண்டியதால் பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |