எல்லையை கடக்க முயன்ற...ரஷ்ய அதிகாரியை சிறைப்பிடித்த அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை
உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்ய கிழக்கு எல்லை நாடாளுமன்றத்தின் உறுப்பினர் விக்டர் கமென்ஷிகோவ் அமெரிக்க- மெக்சிகோ எல்லையை கடக்க முயற்சிக்கும் போது எல்லைப் பாதுகாப்பு படையினரால் சிறைப்பிடிக்க பட்டுள்ளார்.
கிழக்கு ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி பிராந்தியத்தின் நிர்வாக மையத்தில் உள்ள விளாடிவோஸ்டாக் டுமாவில் (அரசு சபை) உறுப்பினரான விக்டர் கமென்ஷிகோவ் (Viktor Kamenshchikov) உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்த்து தனது உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராஜினாமா செய்தார்.
மேலும் அவர் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்த்து கருத்து தெரிவித்துடன் கடந்த பிப்ரவரி இறுதியில் இருந்து அவரை டுமாவின் சந்திப்புகளில் பார்க்க முடியவில்லை என RIA அறிக்கைகள் தெரிவித்தன.
அதனைத் தொடர்ந்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் ஜனாதிபதி புதினின் முடிவுகள் குறித்து விமர்சனம் செய்தற்காக ரஷ்ய காவல்துறையால் கமென்ஷிகோவ் கைது செய்யபட்டதாக அப்போது ரஷ்ய செய்தி நிறுவனமான RIA Novosti-விற்கு சில ஆதாரங்கள் தகவல் தெரிவித்தாக அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், விக்டர் கமென்ஷிகோவ் அமெரிக்க- மெக்சிகோ எல்லையை கடக்க முயற்சிக்கும் போது அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய விண்கலம் அனுப்பிய...பிரமிக்கவைக்கும் சூரியனின் மிக நெருங்கிய புகைப்படம்!
ஆனால் அவர் எங்கு துல்லியமாக என சிறைப்பிடிக்கபட்டார் என அறிக்கைகள் தெரிவிக்காததால், அது தொடர்பான விளக்கங்களுக்காக Newsweek செய்தி நிறுவனம் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் தொடர்பு கொண்டுவருகிறது என்பது குறிப்பிடதக்கது.