ட்ரம்ப் அளித்த நெருக்கடி... சொத்துக்களை விற்கத் தொடங்கிய ரஷ்ய எண்ணெய் நிறுவனம்
உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தடையை அடுத்து ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சொத்துக்கள் விற்பனை
கடந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகம் தடை செய்த இரண்டு பெரிய ரஷ்ய நிறுவனங்களில் ஒன்றான Lukoil தற்போது தங்களின் வெளிநாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவின் நடவடிக்கைகளால் தாம் விரக்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட ட்ரம்ப், அந்த நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் Lukoil மற்றும் Rosneft மீது தடைகளை அறிவித்தார்.
இதில் தற்போது Lukoil வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாடுகள் Lukoil நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக, தங்களது சர்வதேச சொத்துக்களை விற்கும் நோக்கத்தை அறிவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் சொத்துக்கள் மீதான ஏல செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் சிறிதும் முன்னேற்றமின்றி காணப்படுகிறது.

கட்டுப்பாடு நடவடிக்கை
இந்த நிலையிலேயே, கட்டுப்பாடு நடவடிக்கைகளை ட்ரம்ப் அறிவித்ததுடன், அறிவிப்புக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான சந்திப்பையும் அவர் ரத்து செய்தார். ஆனால், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான கட்டுக்காடு நடவடிக்கைகள் தீவிரமானது என குறிப்பிட்ட புடின், ரஷ்ய பொருளாதாரத்தை உலுக்கும் அளவிற்கு வலுவானதல்ல என்றார்.
ட்ரம்ப் அறிவித்துள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகளால் Lukoil மற்றும் Rosneft நிறுவனங்களின் அமெரிக்க சொத்துக்களும் முடக்கப்படும். அந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்களும் வணிகம் செய்ய முடியாது.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 55 சதவீத எண்ணெய் உற்பத்தியை இந்த இரு நிறுவனங்களும் முன்னெடுக்கிறது. உலக வணிகங்கள் அஞ்சும் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இந்த இரு நிறுவனங்களும் இடம்பெற உள்ளது.
இந்த இரு நிறுவனங்களுடன் வர்த்தகம் முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு அதை முறித்துக்கொள்ள ஒரு மாத கால அவகாசம் அமெரிக்காவால் அளிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |