ஐரோப்பிய நாடொன்றிக்கான ரஷ்ய எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடக்கம்: உக்ரைனால் உருவான எதிர்வினை
ஹங்கேரி நாட்டிற்கான எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக புதன்கிழமை ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ வழங்கிய தகவலில், ஹங்கேரி நாட்டிற்கான எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மீண்டும் தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த சமீபத்திய அறிவிப்பானது, ட்ருஷ்பா எரிசக்தி குழாய் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிறகு ஹங்கேரியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி குழாயின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆகஸ்ட் 28ம் திகதி முதல் குறைந்த அளவிலான எரிசக்தி வாயு ரஷ்யாவிடம் இருந்து ஹங்கேரிக்கு விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிசக்தி குழாய் மீது உக்ரைனால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மிகச் சிறந்த தீர்வு, இந்த முடிவின் மூலம் எடுக்கப்பட்டு இருப்பதாக ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோ தன்னிடம் தெரிவித்ததாக ரஷ்ய எரிசக்தி துறை அமைச்சர் பவெல் சோரோகின் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனை ஆதரிக்கும் ஹங்கேரிய அரசியல்வாதிகளையும், எரிசக்தி விநியோகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்து வரும் ஐரோப்பிய ஆணையத்தையும் பீட்டர் சிஜ்ஜார்டோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன் அறிக்கையின் இறுதியில், ஹங்கேரியின் எரிசக்தி குழாய்களை சேதப்படுத்தும் நடவடிக்கையை உக்ரைன் நிறுத்தி கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |