ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய்... சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்ட தகவல்
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த 2022ல் இருந்து அந்த நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் நவம்பரில் மிகக் குறைந்த மாதாந்திர நிலைக்கு சரிவடைந்ததாக சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
உக்ரேனிய தாக்குதல்
ரஷ்யா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது மற்றும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து கிடைக்கும் வருமானம் அதன் மாநில நிதிக்கு இன்றியமையாதது.

மட்டுமின்றி, மோசமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெருகிவரும் தாக்கத்தின் அழுத்தம், அதன் எரிசக்தி தளங்கள் மீதான உக்ரேனிய தாக்குதல்கள் என ரஷ்யா மொத்தமாகவே தடுமாறி வருகிறது.
இதன் காரணமாகவே, போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைன் மீது அழுத்தமளித்து வருகிறது. ஆனால், உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது ட்ரம்பால் இதுவரை போதுமான அழுத்தமளிக்க முடியவில்லை.
இந்த நிலையில், தற்போது எண்ணெய் ஏற்றுமதி வருவாயும் சரிவடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்த வருவாய் 11 பில்லியன் டொலர் என பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டின் வருவாயை விட 3.6 பில்லியன் டொலர் குறைவாகும். ரஷ்ய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 22 சதவீதம் சரிவடைந்து மொத்தம் 88 பில்லியன் டொலராக இருந்ததாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தடை விதிக்கப்பட்ட சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்கள் மீதான உக்ரைனின் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் நவம்பர் மாத கடல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் கருங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துள்ளன.

அக்டோபரில், ரஷ்யாவின் எரிசக்தித் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்தது, அதன் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தடைகளை விதித்தது.
எண்ணெய் வருவாய்
உக்ரைனில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை குறிப்பிடப்பட்டது.
மட்டுமின்றி, கோடை மற்றும் இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியது, இதனால் உள்நாட்டு பெட்ரோல் விலைகள் உயர்ந்தன, மேலும் சில ரஷ்ய பிராந்தியங்கள் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதிக இராணுவச் செலவு, கடுமையான பணவீக்கம் மற்றும் குறைந்த எண்ணெய் வருவாய் ஆகியவற்றின் கலவையானது ரஷ்ய பட்ஜெட்டை வெகுவாக பாதித்துள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு ரஷ்யா 50 பில்லியன் டொலர் பற்றாக்குறையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் மூன்று சதவீதத்திற்கு சமம்.
இதன் தாக்கத்தை எதிர்கொள்ள அடுத்த ஆண்டு நுகர்வோர் மற்றும் வணிகங்கள் மீதான வரிகளை உயர்த்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |