பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் உயர்வு
மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பிற எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி வருவாய் கடந்த மாதம் உயர்ந்துள்ளது.
International Energy Agency (IEA) வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரியில் ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் 900 மில்லியன் டொலர் அதிகரித்து, மொத்தம் 15.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
[WNIJHLT ]
ரஷ்யா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகள், ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் விதிமுறைகளை கடினமாக்கியுள்ளது.
ஆனாலும், ரஷ்யா புதிய ஏமாற்று வழிகளை பயன்படுத்தி தனது எண்ணெய் விற்பனையை தொடர்ந்துள்ளது.
2025-ல் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி தினசரி 9.25 மில்லியன் பீப்பாயாக இருக்கும் என IEA கணிக்கிறது, இது முந்தைய கணிப்பை விட 150,000 பீப்பாய் குறைவாகும்.
ஜனவரியில் எண்ணெய் உற்பத்தி தினசரி 9.2 மில்லியன் பீப்பாயாக அதிகரித்துள்ளது.
மேலும் அனைத்து விற்பனைகளும் மேற்கத்திய நாடுகள் விதித்த $60/பீப்பாய் வரம்பை மீறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, உலகளாவிய எண்ணெய் சந்தையில் புதிய சிக்கல்களை உருவாக்கும் ஆபத்து உள்ளதாக IEA எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russian Oil Export, Russia Revenue, Russian Sanctions