ட்ரம்பின் மிரட்டல் ஒருபக்கம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா முடிவு
உற்பத்தியாளர்கள் அதிக கச்சா எண்ணெயை விற்க விலைகளைக் குறைத்துள்ளதால், இந்தியாவிற்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி செப்டம்பரில் உயரும் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய கொள்முதல்
உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகள் சேதமடைந்துள்ளதாலையே இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் மேற்கத்திய நாடுகளின் தடைகளால் முடங்கிய ரஷ்ய எண்ணெய் விநியோகங்களின் மிகப்பெரிய கொள்முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இது இந்தியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகளை நடத்தும் வணிகர்களுக்கு மலிவான கச்சா எண்ணெய் கிடைக்க வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இந்த கொள்முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வகாத்திடமிருந்து கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இதனால் இந்திய இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகளை 50% ஆக உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில், ட்ரம்பின் கூடுதல் வரிகளை குறைக்க பேச்சுவார்த்தைகளை நம்பியிருப்பதாக இந்திய அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பது உட்பட வேறு இடங்களில் இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதற்கான சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, மலிவு விலை ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்தியா கொள்ளை லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இன்னும் பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள ரஷ்ய பொருட்களை வாங்குவதாக இந்திய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
எண்ணெய் ஏற்றுமதி
ஆனால் இந்தியாவின் உதவி இல்லை என்றால், ரஷ்யா தற்போதுள்ள நிலையில் ஏற்றுமதியை பராமரிக்க போராடும் நிலை ஏற்பட்டிருக்கும். மேலும் அது ரஷ்ய பட்ஜெட்டுக்கும் உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான போருக்கும் நிதியளிக்கும் எண்ணெய் ஏற்றுமதி வருவாயைக் குறைத்திருக்கும்.
இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகஸ்ட் மாத அளவை விட செப்டம்பர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை 10-20% அதிகரிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒரு நாளைக்கு 150,000-300,000 பீப்பாய்கள். இந்தியாவிற்காக ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கும் இரண்டு நிறுவனங்கள், முகேஷ் அம்பாபியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் நயாரா எனர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |