ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் நடவடிக்கை... சிக்கலில் சக்தி வாய்ந்த இரு ஆசிய நாடுகள்
ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் கடும் நடவடிக்கையானது சீனா மற்றும் இந்தியாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது.
183 கப்பல்கள் மீது
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சீன மற்றும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து அதிக எண்ணெயை இறக்குமதி செய்யும், இதனால் விலைகள் மற்றும் சரக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்களான Gazprom மற்றும் Surgutneftegas மீதும், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவும் 183 கப்பல்கள் மீதும் அமெரிக்க நிர்வாகம் வெள்ளிக்கிழமை தடைகளை விதித்தது.
குறித்த வருவாயை உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷ்யா செலவிடுவதாகவே அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட பல கப்பல்களே இந்தியா மற்றும் சீனாவிற்கு எண்ணெய் அனுப்ப ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சில கப்பல்கள் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதுவும் மேற்கத்திய நாடுகளின் தடை விதிப்பில் சிக்கியுள்ளவை என்றே கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவின் புதிய தடை உத்தரவால் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி என்பது மிக மோசமாக பாதிக்கப்படும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் சீன சுயாதீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் சுத்திகரிப்பு உற்பத்தியைக் குறைக்க நேரிடும்.
புதிதாக தடை விதிக்கப்பட்ட கப்பல்களில், 143 கப்பல்கள் கடந்த ஆண்டு 530 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான ரஷ்ய கச்சா எண்ணெயைக் கையாண்ட எண்ணெய் டேங்கர்களாகும். ரஷ்யாவின் மொத்த கடல்வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 42 சதவிகிதம் இதுவென்றே கூறப்படுகிறது.
அதிகமாக இறக்குமதி
இவற்றில், சுமார் 300 மில்லியன் பீப்பாய்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டன, மீதமுள்ளவற்றில் பெரும்பகுதி இந்தியாவிற்கு சென்றுள்ளது. தற்போதைய இந்தத் தடைகள் குறுகிய காலத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யக் கிடைக்கும் கப்பல்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து, சரக்குக் கட்டணங்களை உயர்த்தும் என்றே வணிக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், கடந்த 12 மாதங்களில் குறிப்பிட்ட டேங்கர்கள் 900,000 bpd ரஷ்ய கச்சா எண்ணெயை சீனாவிற்கு அனுப்பியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஆண்டுக்கு 4.5 சதவிகிதமாக அதிகரித்து 1.764 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது, இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 36 சதவிகிதமாகும்.
இதே காலகட்டத்தில், குழாய் ஊடாக விநியோகம் உட்பட, அளவு 2 சதவிகிதம் அதிகரித்து 99.09 மில்லியன் மெட்ரிக் டன்கள் (2.159 மில்லியன் பீப்பாய்கள்) அல்லது சீனாவின் மொத்த இறக்குமதியில் 20 சதவிகிதமாக இருந்தது.
ஆனால் புதிய தடைகள் சீனாவையும் இந்தியாவையும் மீண்டும் இணக்கமான எண்ணெய் சந்தைக்குள் தள்ளும், இதனால் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்ய நடவடிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுக்கும்.
இதனிடையே, சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிகரித்து வரும் தேவை காரணமாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலிய தரங்களுக்கான ஸ்பாட் விலைகள் சமீபத்திய மாதங்களில் ஏற்கனவே உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |