உக்ரைன் போர் குறித்து ரஷ்ய மக்களின் மனநிலை: அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில், பல்வேறு நாடுகளால் விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடைகளால் பெரும் இன்னல்களை சந்தித்துவருவதாக ரஷ்யர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க் (Luhansk) மற்றும் டொனேட்ஸ்க்( Donetsk) ஆகிய பகுதிகளை ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் சுதந்திர பகுதிகளாக அறிவித்ததை தொடர்ந்து பெரும்பாலான உலகநாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான அதிகாரப்பூர்வ ராணுவத்தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இறுக்கமான சூழ்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து அந்த நாட்டு மக்களிடம் தனியார் செய்தி நிறுவனமான பிபிசி கருத்து கேட்டுள்ளது.
அதனடிப்படையில் விளாடிமிர் சந்தையில் பணிபுரியும் மூதாட்டி தெரிவித்துள்ள கருத்தில், அனைவரும் உக்ரைனின் மீதான பிரச்சனைகளில் மூழ்கியுள்ளனர், ஆனால் இங்கு ரஷ்யாவிலும் இந்த போரில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது, என்னுடைய முதியோர் ஓய்வூதியம் இந்த பொருளாதார நிலைமைகளை சமாளிப்பதற்கு போதுமானதாக இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஷ்யாவில் உள்ள மற்றொரு தம்பதிகள் தெரிவித்துள்ள கருத்தில், ரஷ்யாவிற்கு எதிர்களால் மிக பெரிய ஆபத்து இருப்பதாக தெரிவித்து, ரஷ்ய மக்களின் மனதில் ஒரு போலியான எதிரிகளை ரஷ்யா அரசாங்கம் உருவாக்கிவருகிறது. இந்த போலியான எதிரிகளை காரணம் காட்டி மக்களை அவர்களின் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்புகிறது என தெரிவித்துள்ளார்.