165 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகள் - ரூ.12 கோடி இழப்பீடு கோரும் நிறுவனம்
165 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகளிடம் விமான நிறுவனம் ரூ.12 கோடி இழப்பீடு கோரியுள்ளது.
165 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிகள்
யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று, கடந்த செப்டம்பர் 12, 2023 அன்று, 21 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட 165 பேருடன் ரஷ்யாவின் சோச்சியிலிருந்து ஓம்ஸ்க்கு புறப்பட்டது.

விமானம் பறந்து கொண்டிருந்த போது ஹைட்ராலிக் கோளாறை உணர்ந்த விமானிகள், நோவோசிபிர்ஸ்க்கு விமானத்தை திருப்பி தரையிறக்க முயற்சித்தனர்.
ஆனால், ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக தரையிறங்கும் கியர் கதவு திறந்தே இருந்ததால், வலுவான எதிர்க்காற்றுகளால் எரிபொருள் நுகர்வு அதிகரித்தது.
எரிபொருள் பற்றாக்குறையால், நோவோசிபிர்ஸ்கில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் உள்ள கமென்கா கிராமத்திற்கு அருகில் உள்ள கோதுமை வயலில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த 165 பேரும் எந்த காயங்களும் இல்லாமல் காப்பாற்றப்பட்டதால், தொடக்கத்தில் விமானத்தை இயக்கிய விமானிகளான செர்ஜி பெலோவ் மற்றும் எட்வார்ட் செமியோனோவ் ஹீரோவாக கொண்டாடப்பட்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விமானக் குழுவினரின் செயல்களைப் பாராட்டினார்.
ரூ.12 கோடி வழக்கு
ஆனால், இந்த நிகழ்வு தொடர்பாக ரஷ்யாவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிறுவனம் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணை முடிவடையும் வரை இரு விமானிகளும் விமானத்தை இயக்க தடை செய்யப்பட்டனர்.
அதை தொடர்ந்து இரு விமானிகளையும் ராஜினாமா செய்ய விமான நிறுவனம் வற்புறுத்தியாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பெடரல் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானிகளின் பயிற்சியின் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் குறைந்த அளவு இருப்பதாக தெரிவித்தது.

அந்த விமானங்கள் பயன்படுத்த முடியாத நிலையில், அதன் பாகங்களை பிரித்தெடுக்க விமான நிறுவனம் முடிவெடுத்தது. அந்த வயலில் நிறுத்தியதற்காக வயலின் உரிமையாளர்களுக்கு வாடகையாக ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபிள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம்) வழங்கியது.
Quick question: when is a pilot a hero vs a rule-breaker?
— Fahad Naim (@Fahadnaimb) January 23, 2026
2023 Ural Airlines...hydraulic failure mid-flight, Sergey Belov lands in open field, all 170 survive unharmed.
Started as hero vibes, but now criminal charges against him for safety violations.
Airline tried forcing… pic.twitter.com/TWeUMAmjJo
தற்போது 1.3 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.12கோடி) இழப்பீடு கோரும் வழக்கை இரு விமானிகளும் எதிர்கொண்டு வருகின்றனர்.
சேத மதிப்பீடு கடுமையான நடைமுறை குறைபாடுகளுடன் நடத்தப்பட்டதாகவும், நிதி கணக்கீடுகள் தேவையான அதிகாரப்பூர்வ ஆவணங்களால் ஆதரிக்கப்படவில்லை என்றும் விமானிகள் தரப்பு வாதிடுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |