உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்களை ஆடையில்லாமல் தோப்புக்கரணம் போடவைத்த ரஷ்ய பொலிசார்
உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இளம்பெண்கள் 20 பேரை, கட்டாயப்படுத்தி ஆடைகளை அகற்றி நிர்வாணமாக தோப்புக்கரணம் போடவைத்து அவமதித்துள்ளார்கள் ரஷ்யப் பொலிசார்.
18 முதல் 27 வயது வரையுள்ள அந்த இளம்பெண்களை பேரணி ஒன்றிலோ அல்லது பேரணி நடக்கும் இடத்திற்கு அருகிலோ வைத்து, சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள் பொலிசார்.
இந்த சம்பவம் நடக்கும்போது, சம்பவ இடத்தில் பெண் பொலிசார்தான் நின்று அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி ஆடைகளை அகற்றச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும், சிறை அறைகள் சிலவற்றின் கதவுகள் திறந்திருந்ததாகவும், அவ்வழியே ஆண் பொலிசாரும் நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அனைத்து அறைகளிலும் கமெராக்கள் பொருத்தப்பட்டிருக்க, அந்த இளம்பெண்கள் அவமதிக்கப்பட்ட காட்சிகள் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதலில் அந்த இளம்பெண்கள் ஆடைகள் அகற்றப்பட்டு தோப்புக்கரணம் போட உத்தரவிடப்பட்டுள்ளார்கள் என்று கூறும் அந்தப் பெண்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணியான Olimpiada Usanova, இரண்டாவது முறை அவர்கள் மீண்டும் CCTV கமெரா முன் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறார்.