எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா... சர்வதேச விலையில் திடீர் மாற்றம்
உக்ரேனிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியது.
எண்ணெய் ஏற்றுமதி
ரஷ்யாவின் இந்த முடிவால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமை எண்ணெய் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.24 அமெரிக்க டொலர் அல்லது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.30 டொலர் அல்லது 2.2 சதவீதம் உயர்ந்து 59.99 டொலராக இருந்தது.
வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் துறைமுகத்தில் இருந்த ஒரு கப்பல், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நோவோரோசிஸ்கில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கு ஆகியவை சேதமடைந்தன, கப்பலின் மூன்று பணியாளர்கள் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், துறைமுகம் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியதுடன் எண்ணெய் குழாய் ஏகபோக நிறுவனமான டிரான்ஸ்நெஃப்ட், வெளியே கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது,
3.22 மில்லியன் டன்
நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், உக்ரைன் இராணுவத்தின் இந்தத் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது, இது மிகவும் அடிக்கடி நிகழ்கிறது. இறுதியில் அவை நீடித்த இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் தாக்கக்கூடும் என்றார்.
இதனிடையே, அக்டோபரில் நோவோரோசிஸ்க் துறைமுகம் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி 3.22 மில்லியன் டன்களை எட்டியதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, அதாவது ஒரு நாளைக்கு 761,000 பீப்பாய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக அக்டோபர் மாதம் 1.794 மில்லியன் டன் எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை, அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் கடந்த வாரம் அமெரிக்க கச்சா எண்ணெய் இருப்பு எதிர்பார்த்ததை விட பெரிய உயர்வை அறிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |