இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்: முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடல்
Russian President Putin Arrives In India: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.
இந்தியா வந்தடைந்த புடின்
சர்வதேச ஒத்துழைப்பை மையமாக கொண்டு நடத்தப்படும் 18 வது BRICS மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்திறங்கியுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
Putin steps off plane to red carpet HONOR GUARD in New Delhi
— RTRussia (@RT_Russia_) September 10, 2026
BRICS Summit 2026 kicks off September 12
Russian leader in India for summit and KEY talks, including with Indian PM Modi https://t.co/Pjw5FkNOus pic.twitter.com/uDghfbgcxQ
குறிப்பாக இந்தியா - ரஷ்யா இடையிலான உத்திசார் கூட்டாண்மைமை உறுதி செய்வது குறித்து இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச உள்ளார்.
18 வது BRICS மாநாடு
புவிசார் அரசியல், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து உலகளாவிய விவாதங்களை முன்னெடுத்து செல்ல உலக தலைவர்களை ஒருங்கிணைக்கும் மேடையாக இந்த 18 வது BRICS மாநாடு நடத்தப்படுகிறது.

18 வது BRICS மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |