குடையைப் பறித்துக்கொண்டு பெண்ணை மழையில் நனையவிட்ட ஒரு நாட்டின் பிரதமர்: எழுந்துள்ள சர்ச்சை
பாகிஸ்தான் பிரதமர், உச்சி மாநாடு ஒன்றிற்காக பிரான்ஸ் வந்த நிலையில், அவர் தனக்குக் குடை பிடிக்க வந்த பெண்ணிடமிருந்து குடையை வாங்கிக்கொண்டு அந்தப் பெண்ணை மழையில் நனையவிட்ட விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
குடையை வாங்கிக்கொண்ட பிரதமர்
பிரான்சில் நடைபெறும் New Global Financing Pact Summit என்னும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமரான Shehbaz Sharif நேற்று பிரான்ஸ் வந்தடைந்தார்.
அப்போது மழை பெய்துகொண்டிருக்கவே, பெண் அலுவலர் ஒருவர் அவருக்கு குடை பிடிக்க முன்வந்தார். அந்தப் பெண்ணிடம் ஏதோ கூறிய Shehbaz Sharif, அவரிடமிருந்து குடையை வாங்கிக்கொண்டு வேகமாக நடையைக் கட்டினார்.
Prime Minister Muhammad Shehbaz Sharif arrived at Palais Brogniart to attend the Summit for a New Global Financial Pact in Paris, France. #PMatIntFinanceMoot pic.twitter.com/DyV8kvXXqr
— Prime Minister's Office (@PakPMO) June 22, 2023
மழையில் நனைந்தபடி பின்தொடர்ந்த பெண் அலுவலர்
Shehbaz Sharif குடையை தன்னிடமிருந்து வாங்கிக் கொண்டதால் என்ன செய்வது என புரியாமல் விழித்த அந்தப் பெண் ஊழியர், மழையின் நனைந்தபடியே அவரைப் பின் தொடர்ந்தார்.
இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மழையில் அந்தப் பெண்ணை நனைய விட்டதற்காக Shehbaz Sharifஐ மக்கள் கரித்துக்கொட்டி வருகிறார்கள்.
சிலர், அவரால் தன் நாட்டுக்கே அவமானம் என்று விமர்சிக்க, வேறு சிலரோ, அவர் எவ்வளவு எளிமையானவர், தானே குடையைப் பிடித்துக்கொண்டு நடக்கிறாரே என்று கூறியுள்ளார்கள்.
He left the Women in the Rain. Such an embarrassment he is to Pakistan. #ShehbazSharif pic.twitter.com/zgQ0inxEl9
— Shaharyar Ejaz ? (@SharyOfficial) June 22, 2023
வேறு சிலரோ, நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு அவர் குடையை வாங்கிக்கொண்டதெல்லாம் சரிதான், ஆனால், பாவம் அந்தப் பெண்ணை மழையில் நனைய விட்டுவிட்டாரே என்று கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |