பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்... புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி

Vladimir Putin Russian Federation
By Arbin Apr 03, 2023 01:30 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆதரவாளரான சமூக ஊடக பிரபலம் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியாகியுள்ளார்.

பரிசுப்பொருளில் வெடிகுண்டு

குறித்த நபருக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பகிர்ந்து வருபவர் 40 வயதான Vladlen Tatarsky.

பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்... புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி | Russian Propagandist Blown Up In Cafe Blast

இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியாகியுள்ளார். இவருடன் அந்த சம்பவத்தில் 25 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vladlen Tatarsky கொல்லப்பட்ட தகவலை ரஷ்ய உள்விவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளதுடன், காயமடைந்த 25 பேர்களில் 19 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்... புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி | Russian Propagandist Blown Up In Cafe Blast

@AP

Vladlen Tatarsky என்பவருக்கு அளித்த பரிசுப்பொருளில் சுமார் 200 கிராம் அளவுக்கு வெடிமருந்துடன் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததாகவும், அது வெடித்ததில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தேநீர் விடுதி ஒன்றில் சுமார் 100 பேர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றை Vladlen Tatarsky முன்னெடுத்து வந்தார். மேலும், வாக்னர் கூலிப்படை நிறுவனரான Yevgeny Prigozhin என்பவருக்கு சொந்தமான தேநீர் விடுதி அது எனவும், குறித்த நிகழ்ச்சிக்கு அவரும் கலந்துகொள்ள இருந்ததாக கூறப்படுகிறது.

பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்... புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி | Russian Propagandist Blown Up In Cafe Blast

@reuters

அடையாளம் தெரியாத பெண்

அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும், அவரே தொடர்புடைய பரிசுப்பொருளை Vladlen Tatarsky என்பவருக்கு அளித்ததாகவும் கூறுகின்றனர்.

பரிசுப்பொருளை அவர் கைப்பற்றிய சில நிமிடங்களில் அந்த பரிப்பொருள் வெடித்துச் சிதறியதாக சம்பவயிடத்தில் காணப்பட்ட சிலர் தெரிவிக்கின்றனர். தற்போது தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருள்... புடின் ஆதரவாளரான பிரபலம் உடல் சிதறி பலி | Russian Propagandist Blown Up In Cafe Blast

Credit: East2West

சம்பவம் நடந்த பகுதியில் டசின் கணக்கான ராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் ரஷ்ய ஊடகங்கள் இது உக்ரைன் உளவுத்துறையின் சதி என தகவல் வெளியிட்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US